கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்துக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் – பிரதமர் மோடி.!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். தேசிய மீட்பு படை மூலம் மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் – பிரதமர் மோடி.
தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்த காரணத்தால் குஜராத் மாநிலத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அம்மாநிலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நவ்சாரி மற்றும் வல்சாத் ஆகிய மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளது. அதனால் இதுவரை 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
சோட்டா உதபூர், நர்மதா ஆகிய மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இது பிரதமர் மோடி, ‘ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். தேசிய மீட்பு படை மூலம் மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.’ என அறிவித்துள்ளார்.