வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் – மத்திய அரசு!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் அவசியம் என மத்திய அரசு கூடுதல் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து பரவி வரும் நிலையில், கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசு தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சர்வதேச பயணிகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா, வங்காள தேசம், சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.