கொரோனா தடுப்பூசிக்காக தொலைபேசியில் ஆதார், OTP ஐ பகிர வேண்டாம் – எச்சரிக்கை விடுக்கும் அரசாங்கம்!
கொரோனா தடுப்பூசி போடுவதற்காக உங்களது சுயவிவரங்கள் கேட்கும் பொழுது ஆதார், OTP கேட்டால் யாரும் பகிர வேண்டாம் என அரசாங்கத்தின் மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனவைரஸ் இல் இருந்து மீள்வதற்காக தற்போதுதான் இந்தியாவில் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட தடுப்பூசி ஒன்றுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். முதல் கட்டமாக மருத்துவர்களும், சுகாதார ஊழியர்களும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளனர். இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
ஆனால், இன்னும் சாதாரண குடிமக்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படவில்லை. இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ள அரசாங்கம், தற்போது ஒரு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்காக இந்திய குடிமக்களிடம் அழைத்து உங்கள் ஆதார் மற்றும் OTP மற்ற விவரங்களை கேட்டால் யாரும் அவற்றை பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளது. இது தவறான செயல் எனவும், ஒருபோதும் தொலைபேசி மூலமாக OTP மற்றும் தனிப்பட்ட விவரங்களை வெளியிட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இதோ அந்த பதிவு,
Some #Fraudsters claiming to be from Drug Authority of India are calling senior citizens to confirm their Aadhaar and OTP for #COVID19Vaccine allocation
It is an act of miscreants. Never disclose OTP and personal details to such telecallers#PIBFactCheck #Unite2FightCorona pic.twitter.com/0F8Lxd4Nqd
— PIB Fact Check (@PIBFactCheck) January 22, 2021