அதானி பவர்…ஒரே ஆண்டில் இத்தனை கோடி இலாபமா?..!

Default Image

அதானி பவர் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.4,645 கோடியாக அதிகரித்துள்ளது.

அதானி பவர் லிமிடெட்,ஒரு இந்திய ஆற்றல் நிறுவனமாகும்.இது இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் துணை நிறுவனமாகும்.அதானி பவர் நிறுவனம் 12,450 மெகாவாட் திறன் கொண்ட ஒரு தனியார் அனல் மின் உற்பத்தி நிறுவனமாகும்.

இந்நிலையில்,அதானி பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு ரூ. 13.13 கோடியாக இருந்த நிலையில்,கடந்த மார்ச் காலாண்டில் பல மடங்கு அதிகரித்து லாபம் ரூ.4,645.47 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக,மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 93 சதவீதம் அதிகரித்து ரூ.13,308 கோடியாக உயர்ந்துள்ளது.இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ.6,902 கோடியாக இருந்தது என்று அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் வடமேற்கு பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இந்தியாவில் மின்சாரத் தேவை தொடர்ந்து வலுவாக வளர்ந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மொத்த எரிசக்தி தேவை 1,380 பில்லியன் யூனிட்கள் (BU) ஆகும்,இது 2020-21 நிதியாண்டிற்கான ஆற்றல் தேவையை விட 8.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.அதேபோல்,2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது,2021-22 இல் 203 ஜிகாவாட் என்ற சாதனை அளவை எட்ட,உச்ச மின் தேவை 6.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதனால்,இவை இந்தியாவில் உள்ள பல அனல் மின் நிலையங்களின் திறனைப் பாதித்து,அவற்றின் மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, சாத்தியமான செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனைப் பாதித்துள்ளது.இதன்காரணமாக,மின் தேவை அதிகரித்து வருவதால், விநியோக தடைகளின் விளைவாக,மார்ச் 2022 இல் டே அஹெட் சந்தையில் மின்சாரத்தின் சராசரி சந்தை விற்பனை விலை ரூ. 8.23/kWh ஆக உயர்ந்தது.

இதன்விளைவாக,கடந்த 2020-21 இல் ரூ.1,269.98 கோடியாக இருந்த நிறுவனத்தின் லாபம்,தற்போது ரூ.4,911.58 கோடியாக உயர்ந்துள்ளது என அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கூறுகையில்:”அதானி குழுமம் இந்தியாவின் எரிசக்தி தேவைகளை நிலையான, நம்பகமான மற்றும் மலிவு விலையில் பூர்த்தி செய்வதில் உறுதியாக உள்ளது.மேலும் அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான பார்வையை முன்னேற்ற உதவுகிறது”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்