அதானி விவகாரம் – அமலாக்கத்துறை அலுவலகம் செல்லும் எதிர்க்கட்சிகள்!
டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி 18 எதிர்க்கட்சிகள் பேரணி செல்ல உள்ளதாக தகவல்.
அதானி விவகாரம் தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணியாக செல்கின்றன. 18 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. அதானி குழும முறைகேடு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் 18 எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனையும் நடத்த உள்ளது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மேலும், அதானி குழுமம் முறைகேடு குறித்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணி செல்லவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இதனிடையே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அமளியால் நாடாளுமன்றம் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாள் அவையும் ஒத்திவைக்கப்பட்டது.