அதானி விவகாரம் – ஆம் ஆத்மி, பி.ஆர்.எஸ், எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!
அதானி பங்குச்சந்தை மோசடியை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கக்கோரி ஆம் ஆத்மி, பி.ஆர்.எஸ், எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.
அமரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமம் பங்குசந்தையில் தொடர் சரிவில் உள்ளது. அதானி குழுமம் பங்குசந்தையை தவறாக கையாளுதல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியோடு, அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதானியின் சாம்ராஜ்ஜியம் பற்றிய ஹிண்டன்பர்க்கின் அறிக்கை ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை இப்போது நாடு முழுவதும் பராக் முடிகிறது. இதன் விளைவாக உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் கெளதம் அதானி தற்போது 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதானி குழுமம் மோசடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் நாடாளுமன்றம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், அதானி பங்குச்சந்தை மோசடியை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கக்கோரி ஆம் ஆத்மி, பி.ஆர்.எஸ், எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன் பதாகைகளை ஏந்தி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.