அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!
அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய புத்தகத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பிப்ரவரி முதல் பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் கேட்ட 100 கேள்விகள் தொடர்பான புத்தகத்தை காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று வெளியிட்டார்.
இதுகுறித்து கூறிய ஜெய்ராம் ரமேஷ், முன்னதாக நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணையை நடத்துமாறு கேட்டிருந்தோம், இப்போது புதிய நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் (ஜேபிசி) விசாரணையை நடத்துமாறு கேட்போம் என்று தெரிவித்துள்ளார்.