உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி!
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கெளதம் அதானி.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்திய பணக்காரரும், பிரபல தொழிலதிபருமான அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்கு சந்தையை தவறாக கையாள்கிறது, கணக்குகளில் முறைகேடு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து, இன்று 4-வது நாளாக பங்குகள் விலை சரிவை சந்தித்துள்ளது. அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் நிறுவன பங்குகள் விலை தொடர் சரிவில் காணப்படுகிறது.
அதானி குழும பங்குகள் இதுவரை 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் விளைவு உலக பணக்காரர் பட்டியலிலும் பிரதிபலித்தது. இந்த நிலையில், உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் வெளியேற்றப்பட்டார் அதானி.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இருந்து வந்த அதானி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டார். கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை அதானி குழுமம் செய்துள்ளது என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருந்து வந்த அதானியின் பங்குகள் தொடர் சரிவு சந்தித்து வரும் நிலையில் பணக்காரர் பட்டியலிலும் சரிவை சந்தித்து வருகிறார்.