பிரதமர் நிவாரண நிதிக்கு அதானி குழுமம் சார்பில் ரூ.100 கோடி அறிவிப்பு.!
உலகம் முழுவதும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 25 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளுக்காக விருப்பம் உள்ளவர்கள் நிதியுதவிவழங்கலாம் என கூறினார்.இந்த அறிவிப்பை தொடர்ந்து பல திரைப்பட நடிகர்கள் , விளையாட்டு வீரர்கள் , தொழிலதிபர்கள் நிதிஉதவி வழங்கி வருகின்றனர்.
நேற்று கொரோனா தடுப்பு பணிக்காக டாடா குழுமம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தனர்.இந்நிலையில் இன்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு அதானி குழுமம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்கப்படும் என அதானி குழுமத்தின் தலைவர்கவுதம் அதானி கூறியுள்ளார்.
மேலும் இந்த சோதனை காலங்களில் அரசாங்கங்களுக்கும் , சக குடிமக்களுக்கும் ஆதரவளிக்க அதானி குழு கூடுதல் ஆதாரங்களை வழங்கும் எனவும் கூறினார்.
ADANI FOUNDATION is humbled to contribute Rs. 100 Cr to the #PMcaresfund in this hour of India’s battle against #COVID19. ADANI GROUP will further contribute additional resources to support the GOVERNMENTS and FELLOW CITIZENS in these testing times.
— Gautam Adani (@gautam_adani) March 29, 2020