“நாங்கள் நிரபராதி., அவர்கள் கூறுவதில் உண்மையில்லை” திட்டவட்டமாக மறுக்கும் அதானி குழுமம்!

அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறிய குற்றசாட்டுகளில் உண்மையில்லை, அவை அடிப்படை ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Goutam Adani

டெல்லி : முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது ஒரு மிகபெரிய குற்றசாட்டை முன்வைத்தது. முதலீட்டாளர்களை ஈர்க்க பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் எனக் கூறியது. இதனை அடுத்து, இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மிகப்பெரும் சரிவை சந்தித்தது.

தற்போது அதேபோல மீண்டும் ஒரு அமெரிக்க குற்றசாட்டை அதானி குழுமம் எதிர்கொண்டுள்ளது. இதனால்,  இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மொத்தமாக 10% வரை சரிவை கண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அதானி குழுமம் மீது முதலீடு செய்த எல்ஐசி, ஐசிஐசிஐ நிறுவனங்கள் கூட பெரும் சரிவை கண்டுள்ளன.

அமெரிக்க வழக்கறிஞர்கள் குழு நியூயார்க் நீதிமன்றத்தில் கூறுகையில், அதானி குழுமம் சில முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு இந்திய உயர் அதிகாரிகளிடம் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 2000 கோடி) அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் கூறியுள்ளது.

மேலும், அதானி நிறுவனம்,  நமது (அமெரிக்கா) நிதிச் சந்தைகளின் நம்பகத்தன்மையை பணயமாக வைத்து அதானி நிறுவனம் லாபம் பார்க்க விரும்புகிறது. எனவே சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் இருந்து பாதுகாக்கப்பாக இருக்க வேண்டும் என குற்றம் சாட்டை கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த குற்றசாட்டை அதானி குழுமம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அதானி குழும செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில், அமெரிக்க நீஎதித்துறையிம் கூற்றுப்படி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை, குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதி நிரபராதிதான். இந்த வழக்கை  நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்ள போகிறோம்.

எங்கள் நிறுவனம் எப்போதும் வெளிப்படைத்தன்மையுடனும், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை பின்பற்றுவதிலும் எப்போதும் உறுதியாக உள்ளோம். எங்கள் நிறுவன பங்குகளை வைத்திருக்கும், பங்குதாரர்கள் மற்றும் எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அதானி குழுமம், நாங்கள் அனைத்து சட்ட விதிமுறைகளுக்கும் முழுமையாக இணங்கியிருப்பதாக உறுதியளிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்