அதானி குழும புகார்; காங்கிரஸ் சார்பில் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.!
அதானி குழுமத்தின் மீதான புகார் குறித்து விசாரிக்க கோரி காங்கிரஸ் சார்பில், நாடு முழுதும் வரும் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கக்கோரி, நாடு முழுதும் 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அலுவலகங்களின் முன் வரும் 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழுமத்தில் செய்த முதலீடு குறித்து, எல்ஐசி பதில் அளிக்கவேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.