ரூ.10,422 கோடிக்கு பெண்ணா சிமெண்டை வாங்கும் அதானி குழுமம்!

Adani Cement

அதானி குழுமம்: அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான அதானி குழுமம் தற்போது பெண்ணா சிமெண்டை வாங்கவுள்ளது.

அகமதாபாத்தை தலையிடமாய் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமம் இந்திய உட்பட உலகெங்கிலும் பல தொழில்களை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் பிரபலமான அம்புஜா சிமெண்ட் நிறுவனமும் அதானி குழுமத்தை சேர்ந்ததாகும். இந்தியா முழுவதும் இந்த சிமெண்ட் உற்பத்தி மூலம் நல்ல லாபத்தையே ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அதானி குழுமத்தின் அடுத்த கட்ட திட்டமாக ஹைதராபாத்தை தலையிடமாக கொண்டு விளங்கும் பெண்ணா சிமெண்ட் நிறுவனத்தை ரூ.10,422 கோடி ரூபாய்க்கு வாங்க இருக்கிறது. கட்டுமான தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் சிமெண்ட் நிறுவனமான பென்னா சிமெண்ட் நிறுவனம் வருடத்திற்கு 14 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி திறன் கொண்டது.

தற்போது, அதானி குழுமம் இதை வாங்கினால் அம்புஜா சிமெண்ட் வருடத்திற்கு 89 மில்லியன் டன் சிமெண்ட் தயாரிக்கும் திறன் கொண்டதாக மாறிவிடும். ஆனால், அதானி குழுமம் வருடத்திற்கு 140 மில்லியன் டன் சிமெண்ட் தயாரிப்பதை இலக்காக கொண்டுள்ளது. மேலும், பென்னா சிமெண்ட் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் தென் இந்தியாவில் சிமெண்ட் விற்பனையில் மிகப்பெரிய அளவில் அதனை குழுமம் கால் பதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மிக முக்கிய இடங்களான ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் பென்னா சிமெண்ட் நிறுவனம் ஒரு வருடத்திற்கு 10 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தியை செய்து வருகிறது. தற்போது, பென்னா சிமெண்ட் நிறுவனத்தை வாங்குவதற்கான வேலைகள் அனைத்தும் 3 -4 மாதங்களில் முடிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்