“அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்” – அதானி கிரீன் எனர்ஜி அறிக்கை!

250 மில்லியன் டாலர் லஞ்சத் திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

adani green energy

டெல்லி : அமெரிக்காவில் கவுதம் அதானி உள்ளிட்ட அதானி குடும்பத்தினருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்’ என்று அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு சுமார் 2,110 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் அந்த சூரிய மின்விநியோக ஒப்பந்தம் பெற, இந்திய அதிகாரிகளுக்கு ரூ.20,000 கோடி லஞ்சம் தர முயற்சி என புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை முன்வைத்து அமெரிக்காவில் ரூ.25,000 கோடி நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதானி கிரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவில் புகார் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு,  அதானி கிரீன் எனர்ஜியின் துணை நிறுவனங்கள் அமெரிக்க டாலர் மதிப்பிலான பத்திரங்களின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

கௌதம் அதானி மற்றும் பிற குழு உறுப்பினர்கள் 250 மில்லியன் டாலர் லஞ்சத் திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

அதே நேரத்தில், குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றவாளிகள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள் என்றும் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் கூறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்