அதானி விவகாரம்: மறைக்கவோ, பயப்படவோ எதுவும் இல்லை – அமித்ஷா
மறைக்கவோ, பயப்படவோ எதுவும் இல்லை என அதானிக்கு பாஜக ஆதரவாக உள்ளது என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்.
அதானி மோசடி விவகாரம்:
அமரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், நாடு முழுவதும் அதானி குழுமத்துக்கு எதிராக குரல் எழுந்துள்ளது. சமீப நாட்களாக மோசடியில் ஈடுபட்ட அதானி குழுமத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் பங்குசந்தையை தவறாக கையாண்டு வருகிறது என்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தது, தற்போது நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது.
அதானி பங்குகள் தொடர் சரிவு:
இந்த அறிக்கையை அடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் பங்குசந்தையில் தொடர் சரிவில் உள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை கண்டதோடு, உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து தள்ளப்பட்டார். அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் தொடர் சரிவால், பல லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியோடு, அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகவும் மாறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம்:
நாடாளுமன்றத்தில் அதானி குழுமம் பங்குச்சந்தை மோசடி தொடர்பாக விவாதிக்கக்கோரியும், விசாரணை நடத்த கோரியும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது, பல்வேறு கேள்விகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசும், பிரதமர் மோடியும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் ஏந்தி அட்டைப்படத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி ஏன் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை, அதானி விவகாரத்தில் பாஜக அரசு பயப்படுகிறதா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதானி விவகாரம் – அமித்ஷா பதில்:
அதானி விவகாரம் குறித்து இதுவரை மத்திய அரசு தரப்பில் யாரும் பதிலளிக்காத நிலை இருந்த நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். மறைப்பதற்கு எதுவும் இல்லாததால் அதானி விவகாரத்தில் பயப்பட எதுவும் இல்லை என்று அதானிக்கு பாஜக ஆதரவாக உள்ளது என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மக்களின் முழு ஆதரவும் பிரதமர் மோடிக்கு:
மேலும் அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் பலரது பேச்சுக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்குவது ஒன்றும் இது முதன்முறை அல்ல. 2024 தேர்தலில் பாஜகவுக்கு போட்டியில்லை, மக்களின் முழு ஆதரவும் பிரதமர் மோடிக்கு உள்ளது. அதானி பாஜக ஆதரிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்தார்.
மேலும், பாஜக அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார்.