காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணையும் நடிகை விஜயசாந்தி.!
நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் உள்துறை அமைச்சர் முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக பல பிரபலங்கள் பாஜக கட்சியில் இணைந்து வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் தென்னிந்திய நடிகையான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது பிரபல தென்னிந்திய நடிகையான விஜய சாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை விஜயசாந்தி பாஜக-வில் 1998-ஆம் ஆண்டு இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.அதன் பின் அதிலிருந்து விலகி தனிக்கட்சியை தொடங்கிய அவர்,ஆதரவு இல்லாத காரணத்தால் 2009-ஆம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் தனது கட்சியை இணைத்தார்.அதில் எம்பி-ஆக தேர்வு செய்யப்பட்ட அவர் அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை 2011-ல் ராஜினாமா செய்து விட்டு 2014-ல் காங்கிரஸில் இணைந்தார்.இந்த நிலையில் தற்போது அவருக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து போதிய மரியாதை வழங்கப்படவில்லை என்பதால் விஜயசாந்தி மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முன்னிலையில் டெல்லியில் வைத்து பாஜகவில் விஜயசாந்தி மீண்டும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.அதனை பாஜக தேசிய துணை தலைவர் டி.கே.அருணா உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.