பெங்களூரு போதைப்பொருள் வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அவரது நெருங்கிய உறவினர் ஆதித்யா அல்வா சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கில் விவேக்கின் வீட்டையும் போலீசார் சோதனை செய்தனர்.
இன்று மதியம் 1 மணியளவில் பெங்களூரு போலீசார் சோதனை தொடங்கினர். ஆதித்யா அல்வா தலைமறைவாக உள்ள நிலையில் விவேக் ஓபராய் வீட்டில் ஆதித்யா இருக்கிறார் என்ற தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாரண்ட் பெற்ற பிறகுதான் ஆய்வு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
கன்னட திரையுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் பாடகர்களுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்ட வழக்கில் ஆதித்யா ஈடுபட்டுள்ளார். ஆதித்யா அல்வா முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கால்ரானி ஆகியோரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…