நடிகர் சுஷாந்த் சிங் மரணம்! சி.பி.ஐ. விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை!
சுஷாந்த் சிங், மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு பரிந்துரை.
நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், சுசாந்த் சிங் இறந்த போது, அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால், அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில் நாளுக்கு நாள், பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிற நிலையில், நடிகர் சுஷாந்த் சிங், மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.