கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்த நடிகர் சோனு சூட்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பாலிவுட் நடிகர் சோனு சூட் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு,கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல்,ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது,விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்தது என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகர் சோனு சூட்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது.இந்த நிலையில்,மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்து வந்தனர்.இதனை கேள்விப்பட்ட நடிகர் சோனு சூட்,அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளார்.
மேலும்,கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மக்கள் தயங்காமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.