நடிகர் சரத்பாபு மறைவு – பிரதமர் மற்றும் ஆளுநர் இரங்கல்…!
நடிகரான நடிகர் சரத்பாபு மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகரான நடிகர் சரத்பாபு இவர் கடந்த நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது நல்லடக்கம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.
இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
ஸ்ரீ சரத் பாபு ஜி பல்துறை மற்றும் படைப்பாற்றல் மிக்கவர். அவரது நீண்ட திரைப்பட வாழ்க்கையில் பல மொழிகளில் பல பிரபலமான படைப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Shri Sarath Babu Ji was versatile and creative. He will be remembered for several popular works in several languages during his long film career. Pained by his passing away. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 22, 2023
ஆளுநர் ஆர்.ரவி இரங்கல்
திறமையான பழம்பெரும் நடிகர் சரத்பாபுவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது திறமையும், தொழில்துறைக்கான பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Deeply saddened by the demise of versatile and talented veteran actor Sarath Babu. His talent and contributions to the industry will always be remembered. My condolences and prayers for strength to his family. Om Shanti.-Governor Ravi pic.twitter.com/cpgAMykZsS
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 22, 2023