நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம் – கர்நாடகா முதல்வர்

Default Image

நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று கர்நாடகா முதல்வர் அறிவிப்பு.

கன்னட திரையுலகில் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் இன்று காலை தனது இல்லத்தில் உடற்பயிற்சி செய்து வந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதன்பின், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஏ.ஆர்.ரகுமான், சோனு சூட், உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கர்நாடகாவின் மிகவும் பிரபலமான சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இப்போது நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். ஒரு பெரிய தனிப்பட்ட இழப்பு மற்றும் சமாளிப்பது கடினம். இந்த இழப்பை தாங்கும் சக்தியை ராஜ்குமார் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என முதல்வர் கூறியிருந்தார்.

விதியின் ஒரு கொடூரமான திருப்பம், புனித் ராஜ்குமார் என்ற ஒரு திறமையான நடிகரை நம்மிடமிருந்து பறித்து விட்டது. இது சாகும் வயதில்லை. வரும் தலைமுறையினர் அவரது படைப்புகள் மற்றும் அற்புதமான ஆளுமைக்காக அவரை அன்புடன் நினைவுகூருவார்கள். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்