நடிகர் பிரகாஷ்ராஜ் மீது தேர்தல் விதி மீறல் புகார்
- கடந்த மார்ச் 12ம் தேதி பெங்களூர் எம்.ஜி சாலையில் நடத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும்.
- அந்த பொதுக்கூட்டம் அரசியல் சாராத பொதுக்கூட்டம் என்பதால் அனுமதியை மீறி பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தது தவறு என டி மூர்த்தி கூறுகிறார்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கவுள்ளது .இந்நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றனர். மேலும் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் மீது தேர்தல் ஆணையத்தில் தேர்தல் விதிமுறை மீறல் புகாரை தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரி டி மூர்த்தி புகார் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் 12ம் தேதி பெங்களூர் எம்.ஜி சாலையில் நடத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும் , அந்த பொதுக்கூட்டம் அரசியல் சாராத பொதுக்கூட்டம் என்பதால் அனுமதியை மீறி பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தது தவறு என டி மூர்த்தி கூறுகிறார்.