3 கோடி ரூபாய் நிவாரண உதவி., சீர் செய்யப்படும் பள்ளிக்கூடம்.! வாரி வழங்கிய மோகன்லால்.!

Actor Mohanlal donated 3 crore rupees for Wayanad landslide Rescue

வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியாத சூழலில் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் தலைவர்கள் சிலர் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வரும் சூழலில், நடிகர் மோகன்லாலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். மீட்பு பணிகளையும் பார்வையிட்டார்.

ராணுவத்தில், கௌரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள நடிகர் மோகன்லால் இன்று அவருக்கான ராணுவ உடையில் முண்டக்கை பகுதியில் மீட்பு பணிகளை ராணுவ வீரர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சம்பவத்தின் துயரம் பற்றி நாம் நேரில் அந்த இடத்திற்கு சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது. நிலச்சரிவு பாதிப்புகள் இன்னும் உள்ளது. சேறும் சகதியுமாக இன்னும் பல மக்கள் உள்ளே சிக்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்த மீட்பு பணியில் அயராது உழைக்கும் அனைவருக்கும் என் இதயத்திலிருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய துயரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலச்சரிவில் நாங்கள் இழந்ததை மீண்டும் பெற முடியாது. ஆனால் அவர்களின் எதிர்காலத்திற்கு நம்மால் உதவ முடியும் என்பதை இந்த சமயத்தில் செய்தாக வேண்டும். சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருக்கிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது பலத்தை காட்ட வேண்டும். என்று மோகன்லால் தெரிவித்தார்.

மேலும், தனது விஷ்ணுசாந்தி அறக்கட்டளை சார்பில் 3 கோடி ரூபாய் நிவாரண உதவிகளை செய்ய உள்ளதாகவும் , முண்டகை பகுதியில் சேதமடைந்த பள்ளியை சீரமைத்து தருவதாகவும் நடிகர் மோகன்லால் கூறியுள்ளார். அதனை அடுத்து, மேப்பாடி ராணுவ முகாம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்தும் லெப்டினன்ட் கர்னல் மோகன்லால் ஆய்வு மேற்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்