அதிரடி ரெய்டு….பாலிவுட் நடிகர் அர்மான் கோஹ்லி கைது ..!
நடிகர் அர்மான் கோஹ்லி தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக இன்று காலை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அர்மான் கோஹ்லியின் மும்பை வீட்டில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) நேற்று சோதனை நடத்தியது. இதனையடுத்து, நடிகர் அர்மான் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்,என்சிபி எழுப்பிய கேள்விகளுக்கு அர்மான் தெளிவற்ற பதில்களை அளித்ததாகவும்,இந்த விசாரணை 12 மணி நேரம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில்,அவரது மும்பை வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு சட்டம் s 21 (a), 21 (a), 28, 29, 30,ஆகிய பிரிவுகளின் கீழ் இன்று காலை நடிகர் அர்மான் கைது செய்யப்பட்டுள்ளார்.
Mumbai | Actor Armaan Kohli and drug peddler Ajay Raju Singh arrested u/s 21(a), 27(a), 28, 29, 30, & 35 of NDPS Act. NCB Mumbai raided Kohli’s house in suburban Andheri and recovered a small quantity of Cocaine drug from him
— ANI (@ANI) August 29, 2021
சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த போதைப்பொருள் விற்பனையாளரான அஜய் ராஜு சிங்கை, போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் கைது செய்து நேற்று விசாரணை நடத்தினர். அதன் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் என்சிபியின் அதிகாரிகள் மும்பை,அந்தேரியில் உள்ள நடிகர் அர்மன் கோஹ்லியின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தியது மற்றும் அவரிடமிருந்து சில போதைப்பொருளை மீட்டநிலையில்,தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக,நடிகர் அர்மான் 2018 ஆம் ஆண்டில் மதுப் பொருட்கள் அவரது வீட்டில் வைத்திருந்ததற்காக கலால் துறையால் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகின்றது.மேலும்,இவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்ஹான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.