இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அனுபம் கெர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துள்ளார். அப்பொழுது பிரதமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமரை சந்தித்த பொழுது அவர் பிரதமருக்கு ருத்ராட்ச மணிகளை பரிசாக வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுபம் கெர் , மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நீங்கள் இரவும் பகலும் உழைத்து கொண்டிருக்கும், கடின உழைப்பிற்கும் நான் நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. மேலும் என் அம்மா அனுப்பிய ருத்ராட்ச மாலையை நீங்கள் ஏற்றுக் கொண்டது எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன்.
கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு உதவி புரியட்டும். இதுபோல் அனைவருக்கும் ஆற்றலை கொடுத்து கொண்டே இருங்கள். ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர், மிக்க நன்றி அனுபம் கெர், உங்கள் மதிப்பிற்குரிய அம்மா மற்றும் நாட்டு மக்களின் ஆசீர்வாதமே இந்தியாவிற்கு சேவை செய்ய தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…