பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த யூ-டியூப் சேனல் மூலம் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார், அந்த கொலையில் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சுஷாந்த் சிங் வழக்கில், அவரது காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி கனடா செல்ல அக்ஷய் குமார் உதவியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த நான்கு மாதங்களில், சுஷாந்தின் போலி வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றுவதன் மூலம் ரஷீத் ரூ .15 லட்சம் சம்பாதித்துள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் யூடியூபருக்கு எதிராக ரூ .500 கோடிக்கு அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட போலி வீடியோவை யூடியூபர் ரஷீத் சித்திகி பகிர்ந்துள்ளார். அவதூறு வீடியோக்களால் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம், மன அழுத்தம் போன்றவற்றால் ரூ.500 கோடி அளவுக்கு அக்ஷய் குமார் இழந்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா ஆதித்ய தாக்கரே மற்றும் மும்பை போலீசாருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ரஷித் சித்திக் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர், இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…