தெலுங்கானா மாநிலம் கொம்பரம் மாவட்டத்தில் உள்ள லிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி 30 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இறந்த பெண் அப்பகுதியில் பாத்திரங்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சேக் மக்தூம் (35), ஷேக் பாபு (30), சேக் ஷாபுதீன் (40) ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத் மாவட்ட சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நிதிபதி பிரியதர்ஷினி குற்றவாளிகள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக இறந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறினர். தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய குற்றவாளிகளுக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…