அதிரடி நடவெடிக்கை.! கடற்படையில் செல்போன் மற்றும் பேஸ்புக் பயன்படுத்த தடை.!

Default Image
  • பாகிஸ்தானுக்கு ரகசிய விபரங்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாகப்பட்டினத்தில், கடற்படை பணியாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இதனால் இந்திய ராணுவ ரகசியங்கள் எதிரி நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என்று தடை.

இந்திய ராணுவ ரகசியங்கள் எதிரி நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், கடற்படை இடங்களில் அதன் ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ள கடற்படை தலைமையகம், கடற்படை தளங்கள், கப்பல் பராமரிப்பு தளங்கள் மற்றும் போர்க் கப்பல்களில் இனிமேல் கடற்படை வீரர்கள் செல்போன்கள், பேஸ்புக், வாட்சப் ஆகிய சமூக வலைத்தளதையும், வணிக ரீதியாக பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள்  பிளிப்காட், அமேசான் போன்றவை பயன்படுத்தக்கூடாது என்றும் அதிரடியாக தடை விதித்திருக்கிறது.

‘ஆபரேஷன் டால்பின் நோஸ்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட 7 கடற்படை வீரர்கள்.!

இந்நிலையில், இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு ரகசிய விபரங்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாகப்பட்டினத்தில், கடற்படை பணியாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களோடு சேர்த்து ஹவாலா நபர் ஒருவரும் கைதாகியுள்ளனர். இதை ஆபரேஷன் டால்பின் நோஸ் என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற செயல்கள் சமூக வலைத்தளங்களான பேஸ்புக்கில் மிக எளிதாக நடப்பதால், கடற்படை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்