ஊழலை ஒழிக்க நடவடிக்கை! ஜிஎஸ்டி, ஆயுஷ்மான் பாரத் வரப்பிரசாதம் – ஜனாதிபதி
அடிமைத்தனத்தை, காலனி ஆதிக்கத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலும் அகற்றம் என பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய ஜனாதிபதி, பல்வேறு திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
ஜனாதிபதி பேசுகையில், ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறுகின்றனர்.
சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவு எடுத்துள்ளது. துல்லிய தாக்குதலில் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூல பயங்கரவாத நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. முறைகேடு என்பது அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது. கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது.
மாற்றுத்திறனிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பழகுடியினருக்காக முன்னெப்போதும் இல்லாத முடிவுகள் மதொய்ய அரசு எடுத்துள்ளது என தெரிவித்தார். மேலும் அவரது உரையில், ஜிஎஸ்டி மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள். வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் சூழல், பொருளாதாரம் நிலையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன் பெண்களின் ஆரோக்கியத்திலும் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. விமர்சையாக நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒற்றுமையை வெளிப்படுத்தியது. அடிமைத்தனத்தை, காலனி ஆதிக்கத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது எனவும் கூறினார். பிரமோஸ் ஏவுகணையின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.