எப்படியும் தங்களை பிரித்து விடுவார்கள் என்பதால் தோழிகள் எடுத்த அதிரடி முடிவு!

Default Image

தங்களை எப்படியும் பிரித்து விடுவார்கள் என்பதால் தோழிகள் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஆணுக்கு பெண் மீதும் காதல் அல்லது அன்பு ஏற்படும் என்பது தான் இயற்கை விதி. ஆனால் தற்போதைய காலங்களில் பெண்கள் பெண்கள் மீதும், ஆண்கள் ஆண்கள் மீதும் என்று ஒரே பாலினத்தவர் காதலிக்கின்றனர், அதிக அளவில் நேசிக்கின்றனர். சில இடங்களில் பெண் தோழிகள் மிக அதிக அளவில் தங்கள் தோழிகளுடன் அன்பை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் உள்ள கல்லூரியில் ஒன்றாக பயின்று வரக்கூடிய அமிர்தா ஆர்யா ஆகிய 21 வயதுடைய இரண்டு பேரும் மிக நெருங்கிய தோழிகள். இருவரும் இணைபிரியாமல் எப்பொழுதும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே இருப்பார்கள். இந்நிலையில், அமிர்தாவுக்கு திருமண ஏற்பாடு அவரது குடும்பத்தினரால் செய்யப்பட்டுள்ளது. எனவே தனது தோழி ஆர்யாவை விட்டுப் பிரிய வேண்டிய நிலை ஏற்படுமே என்ற மன வருத்தத்தில் இருந்த அமிர்தா தனது குடும்பத்தினரிடம் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் பெண் தோழி தானே ஏன் இப்படி கூறுகிறார் என குடும்பத்தினர் அதை அலட்சியமாக எண்ணியுள்ளனர்.

இந்நிலையில் ஆர்யாவிடமும் இந்த திருமண காரியத்தைக் குறித்து அமிர்தா கூற இருவரையும் எப்படியும் திருமணம் செய்து வைத்து, பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் அமிர்தாவும் ஆர்யாவும் சேர்ந்து தீபாவளிக்கு முன்பதாக ஒன்றாக சந்தோஷமாக இருந்தனர். அதன்பின் இருவரும் வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளனர். ஆனால் அன்று இரவு ஏழு மணி ஆகியும் இருவரும் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் அவர்களை தேட ஆரம்பித்துள்ளனர். அன்று இரவு 7 மணி அளவிலே இவர்கள் இருவரும் மூவாற்றுப்புழா ஆற்றுக்கு சென்று அங்கு உள்ள பாலத்தில் நின்று கை கோர்த்து ஆற்றில் குதித்து உயிர் இழந்துள்ளனர். புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இருவரது உடலையும் நேற்று முன்தினம் தான் பூச்சக்கள் காயலில் கிடந்து மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்