அரிசி தட்டுப்பாட்டை தவிர்க்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!
இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. நெல்லை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அரிசி இறக்குமதி செய்ய உலகில் பல நாடுகளுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இதன் காரணமாக உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உணவு தட்டுப்பாட்டை தடுக்கும் விதமாக சில ரக அரிசி ஏற்றுமதிக்கு இன்று முதல் 20% வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.