ராகிங் செய்ததால் ரூ.50,000 அபராதம்.! 44 அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது அதிரடி நடவடிக்கை.!
உத்தரகண்ட்டில் அரசு மருத்துவ கல்லூரியில் ஜூனியர்களை ரேகிங் செய்ததற்காக 44 சீனியர் மாணவர்களுக்கு 50 ஆயிரம் , 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர்களை ராகிங் செய்ததாக 44 மருத்துவ மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகாரை அடுத்து, அவர்கள் மீது மருத்துவகல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட ஒரு மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு மட்டும் ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், மற்ற 43 மாணவர்களுக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களை சீனியர் மாணவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி ரேகிங் செய்தது தான் புகாராக கூறப்படுகிறது.