“ஆசம்கான்” மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி க்கள் வலியுறுத்தல்!
நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் ராமதேவி குறித்து அவதூராக பேசிய சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசம்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்.பி க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற அவையில் நேற்று நடைபெற்ற முத்தலாக் தடுப்பு மசோதா மீதான விவாதத்தில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். அப்போது, பேசிய ஆசம்கான் ராமதேவி குறித்து ஆட்சேபத்திற்கு உரிய கருத்தை கூறியுள்ளார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி க்கள் பலரும் கூச்சலிட்டனர். ஆசம்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்நிலையில்,இன்று அவை கூடியதும் ஆசம்கான் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து கேட்டார். அப்போது பேசிய பாஜக மத்திய அமைச்சர்களான நிர்மலா சீத்தாராமன் மற்றும் ஸ்மிருதி ராணி ஆகியோர் ஆசம்கான் கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இனிமேல் இதுபோன்று அவதூறாக எந்த உறுப்பினரும் பேசாத வகையில் ஆஸம்கான் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதே போல், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.