தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரைக்கைது செய்து என்கவுண்டர் செய்தனர்.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10-வது நாளில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது. பலரும் ஆதரவும் கொடுத்தனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார். மேலும் தெலுங்கானா போலீசாரையும் பாராட்டினார்.
இதை தொடர்ந்து ஆந்திர சட்டசபையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி , பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபடுவர்களை விசாரணை நடத்தி 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை கொடுக்க ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் என கூறனார்.
பின்னர் நடந்த ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தனர். இதை தொடர்ந்து இன்று ஆந்திர சட்டசபையில் ஆந்திர பிரதேச திஷா சட்டம் என பெயர் வைக்கப்பட்ட இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல் 7 நாட்களில் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்படும். வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…