தெருநாய்கள் மக்களைத் தாக்கினால், அதற்கு உணவளிப்பவர்களே பொறுப்பு- உச்ச நீதிமன்றம்
தெருநாய்கள் மக்களைத் தாக்கினால், அதற்கு உணவளிப்பவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் மக்கள் விரும்பினால் நாய்களை கவனித்துக் கொள்ளட்டும், ஆனால் அவை குறிக்கப்பட வேண்டும், சிப் மூலம் கண்காணிக்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தெருநாய்கள் தொல்லை தொடர்பாக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்களே தடுப்பூசி போடுவதற்குப் பொறுப்பாவார்கள் என்றும், அந்த விலங்குகள் மக்களைத் தாக்கினால் அதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளது.
மக்களின் பாதுகாப்புக்கும் விலங்குகளின் உரிமைகளுக்கும் இடையே சமநிலை பேணப்பட வேண்டும் என்று கூறியது.தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண பகுத்தறிவு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கை செப்டம்பர் 28-ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.