தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித்பவார் இன்று துணை முதல்வராக பொறுப்பேற்ற பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.அப்பொழுது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில்,மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை (170) நாங்கள் வைத்திருந்தோம்.காங்கிரஸ் – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் அரசை அமைக்க இருந்தோம்.
குதிரை பேரம் மூலமாக ஆட்சி அமைத்துள்ளது பாஜக.தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது.நாங்கள் மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர்.அஜித் பவாருடன் ஆளுநர் மாளிகைக்கு சில என்சிபி எம்எல்ஏக்கள் சென்றனர் .அந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
அஜித்பவார் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் . கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக அஜித்பவார் நடந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை…
ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…
டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல்…
பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…