மத்திய பிரதேசத்தில் தெரு நாய்கள் மீது ஆசிட் வீசியதில் 5 நாய்கள் உயிரிழந்துள்ளதால், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியின் மகாலட்சுமி நகர் பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றிந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரக்கூடிய மக்கள் சிலர் தெருநாய்கள் மீது ஆசிட் வீசியுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய சில மக்கள் நாகஜிரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரில் தங்கள் காலனி பகுதியில் சுற்றித் திரியக் கூடிய நாய்கள் மீது சிலர் ஆசிட் போன்ற அமிலத்தை வீசுவதாகவும், இதனால் பல நாய்கள் உயிர் இழக்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அப்பகுதியில் ஆசிட் வீசப்பட்டதால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட நாய்களை மீட்டுள்ளனர். இந்த நாய்களுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், 5 நாய்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அடையாளம் தெரியாத குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…