வழக்கத்தை விட அதிகம்… சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.!
கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த 17ஆம் தேதி (கார்த்திகை 1) முதல் ஐயப்ப பக்த்ர்கள் விரதம் இருக்க துவங்கி விட்டனர்.
மண்டல் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 16அம தேதி திறக்கப்பட்டது. 17ஆம் தேதி முதல் பக்த்ர்கள் விரதமிருந்து சபரிமலை யாத்திரையை துவங்கி விட்டனர். 17ஆம் தேதி முதல் நேற்று வரை மட்டுமே சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் தரிசனம் செய்ய வந்துள்ளனர் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. .
சுவாமியே சரணம் ஐயப்பா.! மண்டல பூஜை.. மகரவிளக்கு பூஜை.. பக்தர்கள் கவனத்திற்கு…
பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட இந்தாண்டு அதிகமாக இருப்பதால் தற்போதே தரிசன நேரத்தை தேவசம்போர்டு அதிகரித்து விட்டது. முன்னர் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் 4 மணி முதல் 10 மணி வரையும் இருந்த தரிசன நேரம் தற்போது காலை 3 மணி முதல் பகல் 1 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி என ஒரு நாளைக்கு 16 மணிநேர தரிசனம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27ஆம் தேதி மண்டல பூஜை முடிந்து நடை சாத்தப்படும். அடுத்து மகரவிளக்கு தரிசனத்திற்காக 30ஆம் தேதி நடை திறக்கப்படும். 15ஆம் தேதி மகரவிளக்கு தரிசனம் முடிந்து படி பூஜைகள் ஆரம்பிக்கப்படும். பின்னர் 20ஆம் தேதி அனைத்து பூஜைகளும் நிறைவுற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும்.