பேச்சுவார்த்தையின் படி சீன படைகள் பின்வாங்கியதாக தகவல்.!
லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில்கடந்த 15-ம் தேதி இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில்20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாயது. பிறகு, இரண்டு நாள்கள் கழித்து சீனா இராணுவம் 10 இந்திய ராணுவ வீரர்களைவிடுவித்தது. இதனால், எல்லையில் பதட்டம் நிலவியது.
இதையடுத்து, கடந்த 22-ஆம் தேதி மோல்டோவில் இந்தியா, சீனா ராணுவ கமாண்டர்களுக்கிடையில் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கின் பதற்றம் நிறைந்த பகுதிகளிலிருந்து இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ள ஒருமித்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையின் ஒப்பந்தத்தின் படி கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.