பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர 77% பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக,லோக்கல் சர்க்கிள்ஸ் வலைத்தளம் (LocalCircles)நடத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2019க்குப் பிறகு நேரடியாக நடைபெறும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று கேரளா ஹைகோர்ட் நேற்று வலியுறுத்தியதை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மறைமுக வரியை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது மற்றும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை ஆகியவை பற்றி ஆலோசனை நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்,இந்தியர்களில் 77% பேர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை GST கீழ் வர வேண்டும் என்று விரும்புவதாக லோக்கல் சர்க்கிள்ஸ் வலைத்தளம் (LocalCircles)நடத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அதன்படி,28% க்குள் வந்தால் பெட்ரோல் ரூ. 75,டீசல் ரூ. 70 ஆகக் குறையும் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.இந்த கணக்கெடுப்பில் இந்தியாவின் 379 மாவட்டங்களில் இருந்து 7,500 பதில்கள் பெறப்பட்டு உள்ளன.இதில், 61 சதவிகிதம் ஆண்களும், 39 சதவிகிதம் பெண்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது, தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .101.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ .88.62 ஆகவும் உள்ளது. மும்பையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 107.26 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ .96.19 க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…