பத்ம விருதுகளை வென்ற பிரபல நடிகை சாலை விபத்தில் படுகாயம்…எம்.ஜி.எம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..
- சாலை விபத்தில் பிரபல நடிகை படுகாயம்.
- எம்.ஜி.எம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
இந்தியாவில் பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சபானா ஆஸ்மி இவரது வயது 69. இவர் மகாராஷ்ட்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே இன்று மாலை சரியாக 3மணி .30நிமிடத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது கார், லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதல் சபானா படுகாயமடைந்து உள்ளார். இதனை அடுத்து சபானா ஆஸ்மி அங்கிருந்து மீட்கப்பட்டு உடனடியாக அவர் நவி மும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில், சபனா ஆஸ்மியின் கணவர் ஜாவித் அக்தரும் பயணம் செய்துள்ளார். எனினும் விபத்தில் அவர் எந்த காயமின்றி தப்பினார்.இந்த விபத்தில் சிக்கிய நடிகை சபானா ஆஸ்மி சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை 5 முறை பெற்றுள்ளார். இது தவிர சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது, சர்வதேச விருதுகள் மற்றும் பிற விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.