#Accident : அரசுப்பேருந்து தீப்பிடித்து விபத்து.! 2 பேர் உயிரிழப்பு.! வெளியான பரபரப்பு வீடியோ..!
நாசிக் அருகே ஏற்பட்ட விபத்தில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் இருவர் இறந்தனர், மற்றும் பலர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா: நாசிக்-ல் உள்ள சின்னார் நெடுஞ்சாலையில் ஷிண்டே-பால்ஸ் சுங்கச்சாவடி அருகே இரண்டு அரசுப் பேருந்துகளும் மற்ற வாகனங்களுடன் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு பேருந்தானது அங்கிருந்த மற்ற பைக்குகள் மீது மோதியதில் அந்த இடத்திலேயே தீப்பிடித்தது.
இந்த தீ விபத்தில் பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சிகள் மீட்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விபத்தானது நாசிக் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளனர் எனவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
A major accident occured on Nashik-Sinnar highway wherein two ST buses, a four-wheeler and three to four two-wheelers were involved in an accident near Shinde-False toll plaza. A bus crushed three to four bikers and caught fire on the spot.#Nashik #nashiknews #NashikBusAccident pic.twitter.com/BgVZcfRrRU
— Free Press Journal (@fpjindia) December 8, 2022