இன்றோடு என் பணிக்காலம் முடிவடைந்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் -அலோக் வர்மா
இன்றோடு என் பணிக்காலம் முடிவடைந்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அலோக் வர்மா கடிதம்.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதால் இவர்களை மத்திய கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது. கட்டாய விடுப்பில் அனுப்பிய நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.கடந்த 6ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்க பட்டது.அதில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா_வை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.இதன் பின் அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார்.
நேற்று பிரதமர் தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழுவின் ஆலோசனை நடைபெற்றது.இதன் பின் சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, மத்திய தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு அலோக் வர்மா கடிதத்தில், இன்றோடு என் பணிக்காலம் முடிவடைந்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள்.தீயணைப்புத்துறை இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் முன்பே கடந்துவிட்டேன். மீண்டும் முன்பே முடித்த பணிக்கு செல்வது ஏற்புடையதல்ல என்று அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.