நவம்பர் 1 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது மத்திய கல்வித்துறை அமைச்சகம்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் கல்லூரிகள் & பல்கலைக் கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான அட்டவணையை மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 31.10.2020 க்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து,01.11.2020 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக்கு தயாராக அடுத்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை விடுமுறை ஆகும். செமஸ்டர் தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.செமஸ்டர் தேர்வுக்கு பின் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும்.இதன் பின்னர் ஏப்ரல் 5 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். செமஸ்டர் தேர்வுக்கு தயாராக ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை விடுமுறை காலம் இருக்கும்.ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 2வது செமஸ்டர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…