உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபு யூசுப் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். புலனாய்வுப்பிரிவு ஒரு வருடமாக அபு யூசுப் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் இரவில் பைக்கில் சென்ற அபு யூசுப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அபுயூசுப் வைத்திருந்த 2 வெடிகுண்டுகள் முழுவதும் தயார் நிலையில் இருந்தது.
எனவே அவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடத்த இருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டு என போலீசார் தெரிவித்தனர். கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணையம் வழியாக அபு யூசுப் தொடர்பில் இருந்துள்ளார். அபு யூசுப்பின் சொந்த ஊருக்கு அழைத்து சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தற்கொலைப்படை ஜாக்கெட் உள்பட வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில், அபுயூசுப் தந்தை கூறுகையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக நான் வருந்துகிறேன். அவன் மன்னிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் அவன் செயல் தவறானது என கூறினார். அபுயூசுப் மனைவி கூறுகையில், வீட்டில் துப்பாக்கி வெடிமருந்து சேமித்து வைத்துள்ளார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நான் கூறினேன். ஆனால், நான் அவரை தடுக்க கூடாது என கூறி விட்டார். அவர் மன்னிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களை வைத்து கொண்டு நான் எங்கு செல்வேன்..? என கூறினார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…