அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதில் சுமார் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று தெரிவித்தார்.
இந்திய தொழில்துறை ஆலோசனை கூட்டத்தில் காணொளி மூலம் பேசிய ஹர்தீப் சிங் பூரி, இதுவரை 1.65 கோடி வேலைகள் ஏற்கனவே PMAY – ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
1.12 கோடி கோரிக்கைக்கு எதிராக அமைச்சகம் 1.07 கோடி வீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் இவற்றில் 67 லட்சம் வீடுகள் கட்டுமானத்திற்காக களமிறக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 35 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் நிர்மாணிப்பதில் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1.65 கோடி வேலைகள் PMAY – ன் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
தற்போது, 18 நகரங்களில் சுமார் 700 கிலோமீட்டர் மெட்ரோ நெட்வொர்க் நீளம் செயல்பட்டு வருவதாகவும் 27 நகரங்களில் சுமார் 900 கிமீ நெட்வொர்க் கட்டுமானத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…