40 மணிநேரம் சித்திரவதையை அனுபவித்தாரா அபிநந்தன்?! வெளியான தகவல்கள்!
பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு இந்திய ராணுவம் பல விசாரணைகளுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் அபிநந்தனை சேர்த்தனர்,
இந்நிலையில் அபிநந்தனை பிடித்து சுமார் 40 மணிநேரம் பாகிஸ்தான் ராணுவம் அவரை துன்புறுத்தியதாகவும், அவரை வெளிச்சம் மற்றும் சத்தம் அதிகமாக உள்ள அறையில் அடைத்து வைத்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவரை அடித்து துன்புறுத்தி விசாரித்து உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் தற்போது தீயாய் பரவி வருகிறது.
DINASUVADU