இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன்!!தாயகம் திரும்பினார் அபிநந்தன்!!

Default Image
  • இந்தியாவின் பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார். 
  • இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.

பின்  பிப்ரவரி 27 ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை விமானம் அத்துமீறியபோது இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.அதேபோல் பாகிஸ்தான்  விமனாத்தை மிக் 21 போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

ஆனால் அந்த தாக்குதலின்போது மிக் 21 போர் விமானத்தை காணவில்லை.அதேபோல் விமானியையும் காணவில்லை .பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கேட்டபோது,  விமானி அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தது.

பின்னர் அந்த விமானி அபிநந்தன் என்றும் அவர் சென்னையை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் இருக்கும் நிலையில் அவரை மீட்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டார்.அதில் அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார்.இம்ரான் கான் அறிவித்தவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.

இதன் பின்னர்  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி  வாகா எல்லை வழியாக இன்று மதியம் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதால் வாகா எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.வாகா எல்லையை வந்தடைந்தார் விமானப்படை அதிகாரி அபிநந்தன்.

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானி அபிநந்தன்  உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.அபிநந்தனை வரவேற்க வாகா -அட்டாரி எல்லையில் பொதுமக்கள் குவிந்தனர்.அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்