இன்று மதியம் அபிநந்தன் விடுவிக்கப்படுவார்-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்

Published by
Venu
  • இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை இன்று  விடுவிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.
  • வாகா எல்லை வழியாக இன்று மதியம் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார். 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

மேலும் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி தாக்குதல் நடத்தி இந்திய அரசு  பதிலடி கொடுத்தது. இந்த பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார்.

இந்நிலையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்ககோரி இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.இதையடுத்து இந்திய விமானி அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்து இருந்தது.

 

இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டார்.அதில் அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார்.இம்ரான் கான் அறிவித்தவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுவிக்கப்படுகிறார்.இருநாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.அதேபோல் போர் முக்கியம் இல்லை, அமைதிதான் முக்கியம்.அதேவேளையில் நாங்கள் கோழை கிடையாது என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில்  பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா வழியாக இந்தியா வருகிறார். ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். அபிநந்தன் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார் அபிநந்தன்.

இதனால் அபிநந்தனை வரவேற்க வாகா -அட்டாரி எல்லையில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதால் வாகா எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்  வாகா எல்லை வழியாக இன்று மதியம் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

10 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

11 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

11 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

12 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

12 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

13 hours ago