அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும்-காங்கிரஸ் எம்.பி வலியுறுத்தல்
அபிநந்தன் மீசையை மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு இந்திய ராணுவம் பல விசாரணைகளுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் அபிநந்தனை சேர்த்தனர்.
இவர் பாகிஸ்தானிடம் சிக்கிய நாள் முதலே இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் இவரது பெயர் அதிகமாக பேசபட்டு வந்தது.அதேபோல் பாகிஸ்தானில் இருந்து விடுவிக்க கோரியும் இந்தியாவில் ஆதரவு பெருகிவந்தது.விடுதலை ஆனா பின்னரும் அவருக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அதேபோல் அவரது மீசை போல பலரும் வைத்து அழகு பார்த்தனர். அவரது ஹேர்-ஸ்டைல் என பல தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.