ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் விவகாரம்.! கெஜ்ரிவால் இல்லம் எதிரே பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.!

BJP Women Protest Infront of Arvind Kejriwal House in Delhi

சென்னை : ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் கெஜ்ரிவால் இல்லத்தில் தாக்கப்பட்டதாக கூறி டெல்லில் பஜகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மாலிவால், நேற்று முன்தினம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்றதாகவும், அப்போது கெஜ்ரிவால் பாதுகாவலர் பிபவ் குமார் அவரை தாக்கியதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது. இது குறித்து தொலைபேசி வாயிலாக டெல்லி போலீசாரிடம் ஸ்வாதி மாலிவால் கூறியதாகவும் அப்போது கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் அல்லது புகார் பதியப்படவில்லை.

இதற்கு அப்போதே டெல்லி பாஜக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். டெல்லி முதல்வர் அலுவலகத்தில் பெண் எம்பி தாக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இப்படியான சூழ்நிலையில், இன்று டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜிரிவால் இல்லத்திற்கு எதிரே பாஜக மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கெஜிவால் பெண்களுக்கு எதிரானவர் என்றும், அவர் முதல்வர் பதவியில் விலக வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்